Song 95
வஞ்சங்கொண் டுந்திட ராவண
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- பூர்விகல்யாணி
- Thalam
- திஸ்ர த்ருபுடை (7)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தந்தந் தந்தன தானனதந்தந்தந் தந்தன தானனதந்தந்தந் தந்தன தானனதனதான
Lyrics
வஞ்சங்கொண் டுந்திட ராவணனும்பந்தென் திண்பரி தேர்கரிமஞ்சின்பண் புஞ்சரி யாமெனவெகுசேனை
வந்தம்பும் பொங்கிய தாகஎதிர்ந்துந்தன் சம்பிர தாயமும்வம்புந்தும் பும்பல பேசியுமெதிரேகை
மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகுரங்குந்துஞ் சுங்கனல் போலவேகுண்டுங்குன் றுங்கர டார்மரமதும்வீசி
மிண்டுந்துங் கங்களி னாலெதகர்ந்தங்கங் கங்கர மார்பொடுமின்சந்துஞ் சிந்தநி சாசரர்வகைசேர
வுஞ்சண்டன் தென்றிசை நாடிவிழுந்தங்குஞ் சென்றெம தூதர்களுந்துந்துந் தென்றிட வேதசைநிண்முளை
உண்டுங்கண் டுஞ்சில கூளிகள்டிண்டிண்டென் றுங்குதி போடவுயர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன்மருகோனே
தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதிகொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள்தந்தென்றின் பந்தரு வீடதுதருவாயே
சங்கங்கஞ் சங்கயல் சூழ்தடமெங்கெங்கும் பொங்கம காபுநிதந்தங்குஞ் செந்திலில் வாழ்வுயர்பெருமாளே.
