Song 926
நித்தப் பிணிகொடு மேவிய காயமி
- Sthalam
- கருவூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தத் தனதன தானன தானனதத்தத் தனதன தானன தானனதத்தத் தனதன தானன தானனதனதான
Lyrics
நித்தப் பிணிகொடு மேவிய காயமிதப்புப் பிருதிவி வாயுவு தேயுவுநிற்பொற் ககனமொ டாமிவை பூதகலவைமேவி
நிற்கப் படுமுல காளவு மாகரிடத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடுநெட்டுப் பணிகலை பூணிடு நானெனுமடவாண்மை
எத்தித் திரியுமி தேதுபொ யாதெனவுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொடிச்சைப் படஅறி யாதுபொய் மாயையிலுழல்வேனை
எத்திற் கொடுநின தாரடி யாரொடுமுய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமுதிட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுறஇனிதாள்வாய்
தத்தத் தனதன தானன தானனதித்தித் திமிதிமி தீதக தோதகடத்தக் குடகுகு தாகுட தீகுடவெனபேரிச்
சத்தத் தொலிதிகை தாவிட வானவர்திக்குக் கெடவரு சூரர்கள் தூள்படசர்ப்பச் சதமுடி நாணிட வேலதையெறிவோனே
வெற்றிப் பொடியணி மேனியர் கோகுலசத்திக் கிடமருள் தாதகி வேணியர்வெற்புப் புரமது நீறெழ காணியரருள்பாலா
வெற்புத் தடமலை யாள்வளி நாயகிசித்தத் தமர்கும ராஎமை யாள்கொளவெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவியபெருமாளே.
