Song 927
முட்டம ருட்டி யிருகுழை தொட்டக டைக்க ணியலென
- Sthalam
- கருவூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தன தத்த தனதன, தத்தன தத்த தனதனதத்தன தத்த தனதனத்தனதான
Lyrics
முட்டம ருட்டி யிருகுழை தொட்டக டைக்க ணியலெனமொட்பைவி ளைத்து முறையளித்திடுமாதர்
முத்தமி ரத்ந மரகதம் வைத்தவி சித்ர முகபடமொச்சிய பச்சை யகில்மணத்தனபாரம்
கட்டிய ணைத்து நகநுதி பட்டக ழுத்தி லிறுகியகைத்தல மெய்த்து வசனமற்றுயிர்சோருங்
கட்டமு யக்கி னநுபவம் விட்டவி டற்கு நியமிதகற்பனை பக்ஷ முடனளித்தருளாதோ
வெட்டிய கட்க முனைகொடு வட்டகு ணத்து ரணமுகவிக்ரம வுக்ர வெகுவிதப்படைவீரா
வெற்றியை யுற்ற குறவர்கள் பெற்றகொ டிக்கு மிகமகிழ்வித்தக சித்த வயலியிற்குமரேசா
கிட்டிய பற்கொ டசுரர்கள் மட்டற வுட்க வடலொடுகித்திந டக்கு மலகைசுற்றியவேலா
கெட்டவ ருற்ற துணையென நட்டருள் சிட்ட பசுபதிகெர்ப்பபு ரத்தி லறுமுகப்பெருமாளே.
