Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 925

தசையா கியற் றையினால் முடியத்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - ஆதிதனனா தனனத் தனனா தனனத்தனனா தனனத்தனதான

Lyrics

தசையா கியற் றையினால் முடியத்தலைகா லளவொப்பனையாயே

தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்றவிரா வுடலத்தினைநாயேன்

பசுபா சமும்விட் டறிவா லறியப்படுபூ ரணநிட்களமான

பதிபா வனையுற் றநுபூ தியிலப்படியே யடைவித்தருள்வாயே

அசலே சுரர்புத் திரனே குணதிக்கருணோ தயமுத்தமிழோனே

அகிலா கமவித் தகனை துகளற்றவர்வாழ் வயலித்திருநாடா

கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்கமலா லயன்மைத்துனவேளே

கருணா கரசற் குருவே குடகிற்கருவூ ரழகப்பெருமாளே.

All songs →