Song 916
வாளின் முனையினு நஞ்சினும் வெஞ்சம
- Sthalam
- வயலு¡ர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தனதன தந்தன தந்தனதான தனதன தந்தன தந்தனதான தனதன தந்தன தந்தனதனதான
Lyrics
வாளின் முனையினு நஞ்சினும் வெஞ்சமராஜ நடையினு மம்பதி னும்பெருவாதை வகைசெய்க ருங்கணு மெங்கணுமரிதான
வாரி யமுதுபொ சிந்துக சிந்தசெவாயு நகைமுக வெண்பலு நண்புடன்வாரு மிருமெனு மின்சொலு மிஞ்சியபனிநீருந்
தூளி படுநவ குங்கும முங்குளிரார மகில்புழு கும்புனை சம்ப்ரமசோதி வளர்வன கொங்கையு மங்கையுமெவரேனுந்
தோயு மளறெனி தம்பமு முந்தியுமாயை குடிகொள்கு டம்பையுள் மன்பயில்சூளை யரையெதிர் கண்டும ருண்டிடலொழிவேனோ
காளி திரிபுரை யந்தரி சுந்தரிநீலி கவுரிப யங்கரி சங்கரிகாரு ணியசிவை குண்டலி சண்டிகைத்ரிபுராரி
காதல் மனைவிப ரம்பரை யம்பிகைஆதி மலைமகள் மங்கலை பிங்கலைகான நடனமு கந்தவள் செந்திருஅயன்மாது
வேளி னிரதிய ருந்ததி யிந்திரதேவி முதல்வர்வ ணங்குத்ரி யம்பகிமேக வடிவர்பின் வந்தவள் தந்தருளிளையோனே
வேலு மயிலுநி னைந்தவர் தந்துயர்தீர வருள்தரு கந்தநி ரந்தரமேலை வயலையு கந்துள நின்றருள்பெருமாளே.
