Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 917

விகட பரிமள ம்ருகமத இமசல

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன------------ 3 முறை ---------தந்ததான

Lyrics

விகட பரிமள ம்ருகமத இமசலவகிர படிரமு மளவிய களபமுமட்டித்தி தழ்த்தொடைமு டித்துத்தெ ருத்தலையில்

உ லவி யிளைஞர்கள் பொருளுட னுயிர்கவர்கலவி விதவிய னரிவையர் மருள்வலையிட்டுத்து வக்கியிடர் பட்டுத் தியக்கியவர்

விரவு நவமணி முகபட எதிர்பொருபரண புளகித இளமுலை யுரமிசைதைக்கக் கழுத்தொடுகை யொக்கப்பி ணித்திறுகியன்புகூர

விபுத ரமுதென மதுவென அறுசுவைஅபரி மிதமென இலவிதழ் முறைமுறைதுய்த்துக்க ளித்துநகம் வைத்துப்ப லிற்குறியின்

வரையு முறைசெய்து முனிவரு மனவலிகரையு மரிசன பரிசன ப்ரியவுடைதொட்டுக்கு லைத்துநுதல் பொட்டுப்ப டுத்திமதர்

விழிகள் குழைபொர மதிமுகம் வெயர்வெழமொழிகள் பதறிட ரதிபதி கலைவழிகற்றிட்ட புட்குரல்மி டற்றிற்ப யிற்றிமடுவுந்த§முழ்கிப்

புகடு வெகுவித கரணமு மருவியவகையின் முகிலென இருளென வனமெனஒப்பித்த நெய்த்தபல புட்பக்கு ழற்சரிய

அமுத நிலைமல ரடிமுதல் முடிகடைகுமுத பதிகலை குறைகலை நிறைகலைசித்தத்த ழுத்தியநு வர்க்கத்து ருக்கியொரு

பொழுதும் விடலரி தெனுமநு பவமவைமுழுது மொழிவற மருவிய கலவியிதத்துப்ரி யப்படந டித்துத்து வட்சியினில்நைந்துசோரப்

புணரு மிதுசிறு சுகமென இகபரம்உ ணரு மறிவிலி ப்ரைமைதரு திரிமலம்அற்றுக்க ருத்தொருமை யுற்றுப்பு லத்தலையில்

மறுகு பொறிகழல் நிறுவியெ சிறிதுமெய்உ ணர்வு முணர்வுற வழுவற வொருஜகவித்தைக்கு ணத்ரயமும் நிர்த்தத்து வைத்துமறை

புகலு மநுபவ வடிவினை யளவறுஅகில வெளியையு மொளியையு மறிசிவதத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலையென்றுசேர்வேன்

திகுட திகுகுட திகுகுட திகுகுடதகுட தகுகுட தகுகுட தகுகுடதிக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட

டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிடடமட டமமட டமமட டமமடடுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட

திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்திதகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்திதிக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்திஎன்றுபேரி

திமிலை கரடிகை பதலைச லரிதவில்தமர முரசுகள் குடமுழ வொடுதுடிசத்தக்க ணப்பறைகள் மெத்தத்தொ னித்ததிர

அசுரர் குலஅரி அமரர்கள் ஜயபதிகுசல பசுபதி குருவென விருதுகள்ஒத்தத்தி ரட்பலவு முற்றிக்க லிக்கஎழு

சிகர கொடுமுடி கிடுகிடு கிடுவெனமகர சலநிதி மொகுமொகு மொகுவெனஎட்டுத்தி சைக்களிறு மட்டற்ற றப்பிளிறநின்றசேடன்

மகுட சிரதலம் நெறுநெறு நெறுவெனஅகில புவனமும் ஹரஹர ஹரவெனநக்ஷத்ர முக்கிவிழ வக்கிட்ட துட்டகுண

நிருதர் தலையற வடிவெனு மலைசொரிகுருதி யருவியின் முழுகிய கழுகுகள்பக்கப்ப ழுத்தவுடல் செக்கச்சி வத்துவிட

வயிறு சரிகுடல் நரிதின நிணமவைஎயிறு அலைகள் நெடுகிய குறளிகள்பக்ஷ¢த்து நிர்த்தமிட ரக்ஷ¢த்த லைப்பரவியும்பர்வாழ

மடிய அவுணர்கள் குரகத கஜரதகடக முடைபட வெடிபட எழுகிரிஅற்றுப்ப றக்கவெகு திக்குப்ப டித்துநவ

நதிகள் குழைதர இபபதி மகிழ்வுறஅமர்செய் தயில்கையில் வெயிலெழ மயில்மிசைஅக்குக்கு டக்கொடிசெ ருக்கப்பெ ருக்கமுடன்

வயலி நகருறை சரவண பவகுகஇயலு மிசைகளு நடனமும் வகைவகைசத்யப்ப டிக்கினித கஸ்த்யர்க்கு ணர்த்தியருள்தம்பிரானே.

All songs →