Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 915

மேகலை நெகிழ்த்துக் காட்டி வார்குழல் விரித்துக் காட்டி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தானன தனத்தத் தாத்த, தானன தனத்தத் தாத்ததானன தனத்தத் தாத்ததனதான

Lyrics

மேகலை நெகிழ்த்துக் காட்டி வார்குழல் விரித்துக் காட்டிவேல்விழி புரட்டிக் காட்டியழகாக

மேனியை மினுக்கிக் காட்டி நாடக நடித்துக் காட்டிவீடுக ளழைத்துக் காட்டிமதராசன்

ஆகம முரைத்துக் காட்டி வாரணி தனத்தைக் காட்டியாரொடு நகைத்துக் காட்டிவிரகாலே

ஆதர மனத்தைக் காட்டி வேசைகள் மயக்கைக் காட்டஆசையை யவர்க்குக் காட்டியழிவேனோ

மோகன விருப்பைக் காட்டி ஞானமு மெடுத்துக் காட்டிமூதமிழ் முனிக்குக் கூட்டுகுருநாதா

மூவுல களித்துக் காட்டி சேவலை யுயர்த்திக் காட்டுமூரிவில் மதற்குக் காட்டுவயலு¡ரா

வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டிவாழ்மயில் நடத்திக் காட்டுமிளையோனே

மாமலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டிவானவர் சிரத்தைக் காத்தபெருமாளே.

All songs →