Song 914
முலைம றைக்கவும் வாசலி லேதலை
- Sthalam
- வயலு¡ர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தத்தன தானன தானனதனன தத்தன தானன தானனதனன தத்தன தானன தானனதனதான
Lyrics
முலைம றைக்கவும் வாசலி லேதலைமறைய நிற்கவும் ஆசையு ளோரெனமுகிழ்ந கைச்சிறு தூதினை யேவவுமுகமோடே
முகம ழுத்தவும் ஆசைகள் கூறவுநகம ழுத்தவும் லீலையி லேயுறமுறைம சக்கவும் வாசமு லாமலரணைமீதே
கலைநெ கிழ்க்கவும் வாலிப ரானவர்உ டல்ச ளப்பட நாள்வழி நாள்வழிகறைய ழிக்கவு நானென வேயணிவிலையீதே
கடிய சத்திய மாமென வேசொலியவர்கொ டப்பண மாறிட வீறொடுகடுக டுத்திடு வாரொடு கூடியதமையாதோ
மலையை மத்தென வாசுகி யேகடைகயிறெ னத்திரு மாலொரு பாதியுமருவு மற்றது வாலியு மேலிடஅலையாழி
வலய முட்டவொ ரோசைய தாயொலிதிமிதி மித்திமெ னாவெழ வேயலைமறுகி டக்கடை யாவெழ மேலெழுமமுதோடே
துலைவ ருத்திரு மாமயில் வாழ்வுளவயலை யற்புத னேவினை யானவைதொடர றுத்திடு மாரிய கேவலிமணவாளா
துவள்க டிச்சிலை வேள்பகை வாதிருமறுவொ ரெட்டுட னாயிர மேலொருதுகள றுத்தணி யாரழ காசுரர்பெருமாளே.
