Song 913
நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோ
- Sthalam
- வயலு¡ர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்த தனதன தனனா தனனாதத்த தனதன தனனா தனனாதத்த தனதன தனனா தனனாதனதான
Lyrics
நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோபத்ம நறுநுதல் சிலையோ பிறையோநெட்டை யிணைவிழி கணையோ பிணையோஇனிதூறும்
நெக்க அமுதிதழ் கனியோ துவரோசுத்த மிடறது வளையோ கமுகோநிற்கு மிளமுலை குடமோ மலையோஅறவேதேய்ந்
தெய்த்த இடையது கொடியோ துடியோமிக்க திருவரை அரவோ ரதமோஇப்பொ னடியிணை மலரோ தளிரோஎனமாலாய்
இச்சை விரகுடன் மடவா ருடனேசெப்ப மருளுட னவமே திரிவேன்ரத்ந பரிபுர இருகா லொருகால்மறவேனே
புத்த ரமணர்கள் மிகவே கெடவேதெற்கு நரபதி திருநீ றிடவேபுக்க அனல்வய மிகஏ டுயவேஉ மையாள்தன்
புத்ர னென இசை பகர்நூல் மறைநூல்கற்ற தவமுனி பிரமா புரம்வாழ்பொற்ப கவுணியர் பெருமானுருவாய்வருவோனே
சத்த முடையஷண் முகனே குகனேவெற்பி லெறிசுட ரயிலா மயிலாசத்தி கணபதி யிளையா யுளையாயொளிகூருஞ்
சக்ர தரஅரி மருகா முருகாஉ க்ர இறையவர் புதல்வா முதல்வாதட்ப முளதட வயலு¡ ரியலு¡ர்பெருமாளே.
