Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 911

தாமரையின் மட்டு வாசமல ரொத்த

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - ஆதிதானன தனத்த தானன தனத்ததானன தனத்ததனதான

Lyrics

தாமரையின் மட்டு வாசமல ரொத்ததாளிணை நினைப்பிலடியேனைத்

தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்பதாருவென மெத்தியவிராலி

மாமலையி னிற்ப நீகருதி யுற்றுவாவென அழைத்தென்மனதாசை

மாசினை யறுத்து ஞானமு தளித்தவாரமினி நித்தமறவேனே

காமனை யெரித்த தீநயன நெற்றிகாதிய சுவர்க்கநதிவேணி

கானிலுறை புற்றி லாடுபணி யிட்டகாதுடைய அப்பர்குருநாதா

சோமனொ டருக்கன் மீனுலவு மிக்கசோலைபுடை சுற்றுவயலு¡ரா

சூடிய தடக்கை வேல்கொடு விடுத்துசூர்தலை துணித்தபெருமாளே.

All songs →