Song 910
கோவை வாயி தழுக்குந் தாக போக மளிக்குங்
- Sthalam
- வயலு¡ர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தான தனத்தந் தான தான தனத்தந்தான தான தனத்தந்தனதான
Lyrics
கோவை வாயி தழுக்குந் தாக போக மளிக்குங்கோதை மாதர் முலைக்குங்குறியாலும்
கோல மாலை வளைக்குந் தோளி னாலு மணத்தங்கோதி வாரி முடிக்குங்குழலாலும்
ஆவி கோடி யவிக்குஞ் சேலி னாலு மயக்குண்டாசை யாயி னுநித்தந்தளராதே
ஆசி லாத மறைக்குந் தேடொ ணாதொரு வர்க்கொன்றாடல் தாள்க ளெனக்கின்றருள்வாயே
சேவி லேறு நிருத்தன் தோகை பாக னளிக்குந்த்யாக சீல குணத்தன்திருமாலும்
தேடொ ணாத பதத்தன் தீதி லாத மனத்தன்தேயு வான நிறத்தன்புதல்வோனே
காவி டாத திருச்செங் கோடு நாடு தனக்குங்காவி சூழ் வயலிக்கும்ப்ரியமானாய்
காதி மோதி யெதிர்க்குஞ் சூர தீரர் ப்ரமிக்குங்கால னாடல் தவிர்க்கும்பெருமாளே.
