Song 870
கரியகுழல் சரியமுகம் வேர்வாட வாசமுறு
- Sthalam
- சோமீச்சுரம்
- Raagam
- மாண்ட்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - சதுஸ்ரத்ருவம் - கண்டநடை (35)(எடுப்பு - /4/4/4 0)தனனதன தனனதன தானான தானதனதனனதன தனனதன தானான தானதனதனனதன தனனதன தானான தானதனதனதான
Lyrics
கரியகுழல் சரியமுகம் வேர்வாட வாசமுறுகளபமுலை புளகமெழ நேரான வேல்விழிகள்கயல்பொருது செயலதென நீள்பூச லாடநலகனிவாயின்
கமழ்குமுத அதரவிதழ் தேனூறல் பாயமிகுகடலமுத முதவியிரு தோள்மாலை தாழவளைகலகலென மொழிபதற மாமோக காதலதுகரைகாணா
தெரியணுகு மெழுகுபத மாய்மேவி மேவியிணையிருவருட லொருவரென நாணாது பாயல்மிசையிளமகளிர் கலவிதனி §ல்முழ்கி யாழுகினுமிமையாதே
இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும்இளமையுமு னழகுபுனை யீராறு தோள்நிரையும்இருபதமு மறுமுகமும் யானோத ஞானமதையருள்வாயே
உ ரியதவ நெறியில்நம நாராய ணாயவெனஒருமதலை மொழியளவி லோராத கோபமுடனுனதிறைவ னெதனிலுள னோதாய டாவெனுமுனுறுதூணில்
உ ரமுடைய அரிவடிவ தாய்மோதி வீழவிரல்உ கிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனைஉ வணபதி நெடியவனும் வேதாவும் நான்மறையுமுயர்வாக
வரியளிக ளிசைமுரல வாகான தோகையிளமயிலிடையில் நடனமிட ஆகாச மூடுருவவளர்கமுகின் விரிகுலைகள் பூணார மாகியிடமதில்சூழும்
மருதரசர் படைவிடுதி வீடாக நாடிமிகமழவிடையின் மிசையிவரு சோமீசர் கோயில்தனில்மகிழ்வுபெற வுறைமுருக னேபேணு வானவர்கள்பெருமாளே.
