Song 871
பட்டுமணிக் கச்சிருகக் கட்டியவிழ்த் துத்தரியப்
- Sthalam
- கொட்டையூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்ததனத் தத்ததனத் தத்ததனத் தத்ததனத்தத்ததனத் தத்ததனத்தனதான
Lyrics
பட்டுமணிக் கச்சிருகக் கட்டியவிழ்த் துத்தரியப்பத்தியின்முத் துச்செறிவெற்பிணையாமென்
பற்பமுகைக் குத்துமுலைத் தத்தையர்கைப் புக்குவசப்பட்டுருகிக் கெட்டவினைத்தொழிலாலே
துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் ப்ரட்டனெனச்சுற்றுமறச் சித்தனெனத்திரிவேனைத்
துக்கமறுத் துக்கமலப் பொற்பதம்வைத் துப்பதவிச்சுத்தியணைப் பத்தரில்வைத்தருள்வாயே
சுட்டபொருட் கட்டியின்மெய்ச் செக்கமலப் பொற்கொடியைத்துக்கமுறச் சொர்க்கமுறக்கொடியாழார்
சுத்தரதத் திற்கொடுபுக் குக்கடுகித் தெற்கடைசிச்சுற்றுவனத் திற்சிறைவைத்திடுதீரன்
கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக்குற்றமறச் சுற்றமறப்பலதோளின்
கொற்றமறப் பத்துமுடிக் கொத்துமறுத் திட்டதிறற்கொற்றர்பணிக் கொட்டைநகர்ப்பெருமாளே.
