Song 820
மகரம துகெட இருகுமி ழடைசி
- Sthalam
- திருவர்ருர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனன தனதன தனனதானான தந்ததனதான
Lyrics
மகரம துகெட இருகுமி ழடைசிவாரார்ச ரங்களெனநீளும்
மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர்வாணாள டங்கவருவார்தம்
பகர்தரு மொழியில் ம்ருகமத களபபாடீர கும்பமிசைவாவிப்
படிமன துனது பரிபுர சரணபாதார விந்தநினையாதோ
நகமுக சமுக நிருதரு மடியநானாவி லங்கல்பொடியாக
நதிபதி கதற வொருகணை தெரியுநாராய ணன்றன்மருகோனே
அகனக கனக சிவதல முழுதுமாராம பந்தியவைதோறும்
அரியளி விததி முறைமுறை கருதுமர்ருர மர்ந்தபெருமாளே.
