Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 799

முலைகு லுக்கிகள் கபடிகள் வடிபு ழுக்கைக ளசடிகள்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தத்தன தனதன தனன தத்தன தனதனதனன தத்தன தனதனதனதான

Lyrics

முலைகு லுக்கிகள் கபடிகள் வடிபு ழுக்கைக ளசடிகள்முறைம சக்கிகள் திருடிகள்மதவேணூல்

மொழிப சப்பிகள் விகடிகள் அழும னத்திகள் தகுநகைமுகமி னுக்கிகள் கசடிகள்இடையேசூழ்

கலைநெ கிழ்த்திக ளிளைஞர்கள் பொருள்ப றித்தமகனியி தழ்ச்சுருள் பிளவிலையொருபாதி

கலவி யிற்றரும் வசவிகள் விழிம யக்கினில் வசமழிகவலை யற்றிட நினதருள்புரிவாயே

அலைநெ ருப்பெழ வடவரை பொடிப டச்சம ணர்கள்குலம்அணிக ழுப்பெற நடவியமயில்வீரா

அரன ரிப்பிர மர்கள்முதல் வழிப டப்பிரி யமும்வரஅவர வர்க்கொரு பொருள்புகல்பெரியோனே

சிலைமொ ளுக்கென முறிபட மிதிலை யிற்சந கமனருள்திருவி னைப்புண ரரிதிருமருகோனே

திரள்வ ருக்கைகள் கமுகுகள் சொரிம துக்கத லிகள்வளர்திருவி டைக்கழி மருவியபெருமாளே.

All songs →