Song 800
சூழ்ந்தேன்ற துக்கவினை செர்ந்தூன்று மப்பில்வளர்
- Sthalam
- தான் தோன்றி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாந்தாந்த தத்ததன தாந்தாந்த தத்ததனதாந்தாந்த தத்ததனதனதான
Lyrics
சூழ்ந்தேன்ற துக்கவினை செர்ந்தூன்று மப்பில்வளர்தூண்போன்ற இக்குடிலுமுலகூடே
சோர்ந் தூய்ந்து மக்கினியில் நூண்சாம்பல் பட்டுவிடுதோம்பாங்கை யுட்பெரிதுமுணராமே
வீழ்ந்தீண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள்வேண்டீங்கை யிட்டுவரகுழுவார்போல்
வேம்பாங்கு மற்றுவினை யாம்பாங்கு மற்றுவிளைவாம்பாங்கில் நற்கழல்கள்தொழஆளாய்
வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள்வான்தோன்று மற்றவருமடிபேண
மான்போன்ற பொற்றொடிகள் தாந்தோய்ந்த நற்புயமும்வான்தீண்ட வுற்றமயில்மிசையேறித்
தாழ்ந்தாழ்ந்த மிக்கடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர்சாய்ந்தேங்க வுற்றமர்செய்வடிவேலா
தானதோன்றி யப்பர்குடி வாழ்ந்தீன்ற நற்புதல்வதான்தோன்றி நிற்கவலபெருமாளே.
