Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 798

மருக்கு லாவிய மலரணை ...... கொதியாதே

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - சதுஸ்ர ரூபகம் - திஸ்ர நடை (9)(எடுப்பு - அதீதம் வீச்சில் 1 தள்ளி )தனத்த தானன தனதனதனதான

Lyrics

மருக்கு லாவிய மலரணைகொதியாதே

வளர்த்த தாய்தமர் வசையதுமொழியாதே

கருக்கு லாவிய அயலவர்பழியாதே

கடப்ப மாலையை யினிவரவிடவேணும்

தருக்கு லாவிய கொடியிடைமணவாளா

சமர்த்த னேமணி மரகதமயில்வீரா

திருக்கு ராவடி நிழல்தனிலுறைவோனே

திருக்கை வேல்வடி வழகியபெருமாளே.

All songs →