Song 797
பெருக்க மாகிய நிதியினர் வரின்மிக
- Sthalam
- திருவிடைக்கழி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்த தானன தனதன தனதனதனத்த தானன தனதன தனதனதனத்த தானன தனதன தனதனதனதான
Lyrics
பெருக்க மாகிய நிதியினர் வரின்மிகநகைத்து வாமென அமளிய ருகுவிரல்பிடித்து போயவர் தொடையொடு தொடைபடவுறவாடிப்
பிதற்றி யேயள விடுபண மதுதமதிடத்தி லேவரு மளவுந லுரைகொடுபிலுக்கி யேவெகு சரசமொ டணைகுவர்கனமாலாய்
முருக்கி னேரித ழமுதுப ருகுமெனவுரைத்து லீலைக ளதிவித மொடுமலைமுலைக்கு ளேதுயில் கொளமயல் புரிகுவர்பொருள்தீரின்
முறுக்கி யேயுதை கொடுவசை யுரைதருமனத்து ரோகிக ளிடுதொழில் வினையறமுடுக்கி யேயுன திருகழல் மலர்தொழஅருள்தாராய்
நெருக்கி யேவரு மவுணர்கள் குலமறவுறுக்கி யேமயில் முதுகினில் விசைகொடுநிலத்தி லேசமர் பொருதவ ருயிர்பலிகொளும்வேலா
நெகத்தி லேஅயன் முடிபறி யிறைதிரிபுரத்தி லேநகை புரிபர னடியவர்நினைப்பி லேயருள் தருசிவ னுதவியபுதல்வோனே
செருக்கு வேடுவர் தருமொரு சிறுமியைமருக்கு லாவிய மலரணை மிசைபுணர்திருக்கை வேல்வடி வழகிய குருபரமுருகோனே
சிறக்கு மாதவ முனிவரர் மகபதியிருக்கு வேதனு மிமையவர் பரவியதிருக்கு ராவடி நிழல்தனி லுலவியபெருமாளே.
