Song 771
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு
- Sthalam
- சீகாழி
- Raagam
- ராக மாலிகை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதிதனதன தந்தன தந்தன தந்தனதனதன தந்தன தந்தன தந்தனதனதன தந்தன தந்தன தந்தனதனதான
Lyrics
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறுசமயமு மொன்றிலை யென்ற வரும்பறிதலையரு நின்று கலங்க விரும்பியதமிழ்கூறுஞ்
சலிகையு நன்றியும் வென்றியு மங்களபெருமைக ளுங்கன முங்குண மும்பயில்சரவண மும்பொறை யும்புக ழுந்திகழ்தனிவேலும்
விருது துலங்க சிகண்டியி லண்டருமுருகி வணங்க வரும்பத மும்பலவிதரண முந்திற முந்தர முந்தினைபுனமானின்
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்தடிவருடிம ணந்துபு ணர்ந்தது வும்பலவிஜயமு மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல்மறவேனே
கருதியி லங்கை யழிந்துவி டும்படிஅவுணர டங்கம டிந்துவி ழும்படிகதிரவ னிந்து விளங்கி வரும்படிவிடுமாயன்
கடகரி யஞ்சி நடுங்கி வருந்திடுமடுவினில் வந்துத வும்புய லிந்திரைகணவன ரங்க முகுந்தன் வருஞ்சகடறமோதி
மருது குலுங்கி நலங்க முனிந்திடுவரதன லங்கல் புனைந்தரு ளுங்குறள்வடிவனெ டுங்கடல் மங்கவொ ரம்புகைதொடுமீளி
மருகபு ரந்தர னுந்தவ மொன்றியபிரமபு ரந்தனி லுங்குக னென்பவர்மனதினி லும்பரி வொன்றிய மர்ந்தருள்பெருமாளே.
