Song 772
சிந்துற்றெழு மாமதி அங்கித் ...... திரளாலே
- Sthalam
- சீகாழி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தத்தன தானன தந்தத்தனதான
Lyrics
சிந்துற்றெழு மாமதி அங்கித்திரளாலே
தென்றற்றரு வாசமி குந்துற்றெழலாலே
அந்திப்பொழு தாகிய கங்குற்றிரளாலே
அன்புற்றெழு பேதைம யங்கித்தனியானாள்
நந்துற்றிடு வாரியை மங்கத்திகழாயே
நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப்பொருவேளே
சந்தக்கவி நூலினர் தஞ்சொற்கினியோனே
சண்பைப்பதி மேவிய கந்தப்பெருமாளே.
