Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 770

சந்த னம்பரி மளபுழு கொடுபுனை

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தந்த தந்தன தனதன தனதனதந்த தந்தன தனதன தனதனதந்த தந்தன தனதன தனதனதனதான

Lyrics

சந்த னம்பரி மளபுழு கொடுபுனைகொங்கை வஞ்சியர் சரியொடு கொடுவளைதங்கு செங்கையர் அனமென வருநடைமடமாதர்

சந்த தம்பொலி வழகுள வடிவினர்வஞ்ச கம்பொதி மனதின ரணுகினர்தங்கள் நெஞ்சக மகிழ்வுற நிதிதரஅவர்மீதே

சிந்தை வஞ்சக நயமொடு பொருள்கவர்தந்த்ர மந்த்ரிகள் தரணியி லணைபவர்செம்பொ னிங்கினி யிலையெனில் மிகுதியுமுனிவாகித்

திங்க ளொன்றினில் நெனல்பொரு ளுதவிலனென்று சண்டைகள் புரிதரு மயலியர்சிங்கி யுங்கொடு மிடிமையு மகலநினருள்கூர்வாய்

மந்த ரங்குடை யெனநிரை யுறுதுயர்சிந்த அன்றடர் மழைதனி லுதவியமஞ்செ னும்படி வடிவுறு மரிபுகழ்மருகோனே

மங்கை யம்பிகை மகிழ்சர வணபவதுங்க வெங்கய முகன்மகிழ் துணைவநல்வஞ்சி தண்குற மகள்பத மலர்பணிமணவாளா

தந்த னந்தன தனதன தனவெனவண்டு விண்டிசை முரல்தரு மணமலர்தங்கு சண்பக முகிலள வுயர்தருபொழில்மீதே

சங்கு நன்குமிழ் தரளமு மெழில்பெறுதுங்க வொண்பணி மணிகளும் வெயில்விடுசண்பை யம்பதி மருவிய அமரர்கள்பெருமாளே.

All songs →