Song 769
கொங்கு லாவிய குழலினு நிழலினு
- Sthalam
- சீகாழி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்த தானன தனதன தனதனதந்த தானன தனதன தனதனதந்த தானன தனதன தனதனதனதான
Lyrics
கொங்கு லாவிய குழலினு நிழலினுநஞ்ச ளாவிய விழியினு மிரணியகுன்று போல்வளர் முலையினு நிலையினுமடமாதர்
கொம்பு சேர்வன இடையினு நடையினுமன்பு கூர்வன மொழியினு மெழில்குடிகொண்ட சேயித ழமுதினு நகையினுமனதாய
சங்கை யாளியை அணுவிடை பிளவளவின்சொல் வாசக மொழிவன இவையிலசம்ப்ர தாயனை அவலனை ஒளிதிகழிசைகூருந்
தண்டை நூபுர மணுகிய இருகழல்கண்டு நாளவ மிகையற விழியருள்தந்த பேரருள் கனவிலு நனவிலுமறவேனே
வங்க வாரிதி முறையிட நிசிசரர்துங்க மாமுடி பொடிபட வடவனல்மங்கி நீறெழ அலகைகள் நடமிடமயிலேறி
வஞ்ச வேல்கொடு முனிபவ அழகியசண்பை மாநக ருறையுமொ ரறுமுகவந்த வானவர் மனதினி லிடர்கெடநினைவோனே
பங்க வீரியர் பறிதலை விரகினர்மிஞ்சு பாதக ரறநெறி பயனிலர்பந்த மேவிய பகடிகள் கபடிகள்நிலைகேடர்
பண்பி லாதவர் கொலைசெயு மனதினரிங்கெ ணாயிர ருயரிய கழுமிசைபஞ்ச பாதகர் முனைகெட அருளியபெருமாளே.
