Song 768
கட்கா மக்ரோ தத்தே கட்சீ
- Sthalam
- சீகாழி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தா தத்தா தத்தா தத்தாதத்தா தத்தத்தனதான
Lyrics
கட்கா மக்ரோ தத்தே கட்சீமிழ்த்தோர் கட்குக்கவிபாடிக்
கச்சா பிச்சா கத்தா வித்தாரத்தே யக்கொட்களைநீளக்
கொட்கா லக்கோ லக்ஆகா ணத்தேயிட்டா சைப்பட்டிடவேவை
கொட்டா னக்கூ னுக்கா எய்த்தேனித்தீ தத்தைக்களைவாயே
வெட்கா மற்பாய் சுற்று¡ மர்ச்சேர்விக்கா னத்தைத்தரிமாறன்
வெப்பா றப்பா டிக்கா ழிக்கேபுக்காய் வெற்பிற்குறமானை
முட்கா னிற்கால் வைத்தோ டிப்போய்முற்சார் செச்சைப்புயவீரா
முத்தா முத்தீ யத்தா சுத்தாமுத்தா முத்திப்பெருமாளே.
