Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 767

ஒய்யா ரச்சிலை யாமென வாசனை

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தய்யா தத்தன தானன தானனதய்யா தத்தன தானன தானனதய்யா தத்தன தானன தானனதனதான

Lyrics

ஒய்யா ரச்சிலை யாமென வாசனைமெய்யா ரப்பணி பூஷண மாலைகளுய்யா நற்கலை யேகொடு மாமதவிதமாகி

ஒவ்வா ரிப்படி யோரென வேயிருகையா ரக்கணை மோதிர மேய்பலவுள்ளார் செப்பிட ஏமுற நாளிலுமுடல்பேணிச்

செய்வா ரிப்படி யேபல வாணிபமிய்யா ரிற்பண மேயொரு காசிடைசெய்யார் சற்பனை காரர்பி சாசருனடிபேணாச்

செய்வா ரிற்படு நானொரு பாதகன்மெய்யா எப்படி யோர்கரை சேர்வதுசெய்யா யற்புத மேபெற வோர்பொருளருள்வாயே

மையா ரக்கிரி யேபொடி யாய்விடபொய்சூ ரப்பதி யேகெட வானவர்வையாய் பொற்சர ணாஎன வேதொழவிடும்வேலா

வையா ளிப்பரி வாகன மாகொளுதுவ்வா ழிக்கட லேழ்மலை தூளிசெய்மைபோ லக்கதி ரேய்நிற மாகியமயில்வாழ்வே

தெய்வா னைக்கர சேகுற மான்மகிழ்செய்யா முத்தமி ழாகர னேபுகழ்தெய்வீ கப்பர மாகுரு வேயெனவிருதூதத்

திய்யா ரக்கழு வேறிட நீறிடுகையா அற்புத னேபிர மாபுரசெய்கா ழிப்பதி வாழ்முரு காசுரர்பெருமாளே.

All songs →