Song 766
ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (6 1/2)தகதிமி-2, தகதிமி-2, தக-1, தகிட-1 1/2தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்ததானத்தன தான தனந்ததனதான
Lyrics
ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்தஊசற்சுடு நாறு குரம்பைமறைநாலும்
ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்துஓடித்தடு மாறி யுழன்றுதளர்வாகிக்
கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்தகூளச்சட மீதை யுகந்துபுவிமீதே
கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்றுகோலக்கழ லேபெற இன்றுஅருள்வாயே
சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்துசேனைச்சம ணோர்கழு வின்கண்மிசையேறத்
தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்றுதீமைப்பிணி தீர வுவந்தகுருநாதா
கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்துகாதற்கிளி யோடு மொழிந்துசிலைவேடர்
காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்துகாழிப்பதி மேவி யுகந்தபெருமாளே.
