Song 77
பதும இருசரண் கும்பிட் டின்பக்
- Sthalam
- திருச்செந்தூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனதனந் தத்தத் தத்தத்தனன தனதனந் தத்தத் தத்தத்தனன தனதனந் தத்தத் தத்தத்தனதான
Lyrics
பதும இருசரண் கும்பிட் டின்பக்கலவி நலமிகுந் துங்கக் கொங்கைப்பகடு புளகிதந் துன்றக் கன்றிக்கயல்போலும்
பரிய கரியகண் செம்பொற் கம்பிக்குழைகள் பொரமருண் டின்சொற் கொஞ்சிப்பதற விதமுறுங் கந்துக் கொந்துக்குழல்சாயப்
புதுமை நுதிநகம் பங்கத் தங்கத்தினிது வரையவெண் சந்தத் திந்துப்புருவ வெயர்வுடன் பொங்கக் கங்கைச்சடைதாரி
பொடிசெய் தருள்மதன் தந்த்ரப் பந்திக்கறிவை யிழவிடும் பண்புத் துன்பப்பொருளின் மகளிர்தம் மன்புப் பண்பைத்தவிரேனோ
திதிதி ததததந் திந்திந் தந்தட்டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத்தெனன தனதனந் தெந்தத் தந்தத்தெனனானா
திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித்திரிரி தரரவென் றென்றொப் பின்றித்திமிலை பறையறைந் தெண்டிக் கண்டச்சுவர்சோரச்
சதியில் வருபெருஞ் சங்கத் தொங்கற்புயவ சுரர்வெகுண் டஞ்சிக் குஞ்சித்தலைகொ டடிபணிந் தெங்கட் குன்கட்க்ருபைதாவென்
சமர குமரகஞ் சஞ்சுற் றுஞ்செய்ப்பதியில் முருகமுன் பொங்கித் தங்கிச்சலதி யலைபொருஞ் செந்திற் கந்தப்பெருமாளே.
