Song 76
படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- பந்துவராளி
- Thalam
- அங்கதாளம் (7 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
(எடுப்பு 1/2 அக்ஷரம் தள்ளி)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2தனதனன தான தான தந்தனதனதனன தான தான தந்தனதனதனன தான தான தந்தனதந்ததான
Lyrics
படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்வியனினுரை பானு வாய்வி யந்துரைபழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரிசங்கபாடல்
பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலைதிருவளுவ தேவர் வாய்மை யென்கிறபழமொழியை யோதி யேயு ணர்ந்துபல்சந்தமாலை
மடல்பரணி கோவை யார்க லம்பகமுதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்வகை வகையி லாசு சேர்பெ ருங்கவிசண்டவாயு
மதுரகவி ராஜ னானென் வெண்குடைவிருதுகொடி தாள மேள தண்டிகைவரிசையொடு லாவு மால கந்தைதவிர்ந்திடாதோ
அடல்பொருது பூச லேவி ளைந்திடஎதிர்பொரவொ ணாம லேக சங்கரஅரஹர சிவாம ஹாதெ வென்றுனிஅன்றுசேவித்
தவனிவெகு கால மாய்வ ணங்கியுளுருகிவெகு பாச கோச சம்ப்ரமஅதிபெல கடோ ர மாச லந்தரனொந்துவீழ
உடல்தடியு மாழி தாவெ னம்புயமலர்கள்தச நூறு தாளி டும்பகலொருமலரி லாது கோவ ணிந்திடுசெங்கண்மாலுக்
குதவியம கேசர் பால இந்திரன்மகளைமண மேவி வீறு செந்திலிலுரியஅடி யேனை யாள வந்தருள்தம்பிரானே.
