Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 756

வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசையமு வாசையனல்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாத்ததனத் தாந்ததன தானதன தானதனதாத்ததனத் தாந்ததன தானதன தானதனதாத்ததனத் தாந்ததன தானதன தானதனதந்ததான

Lyrics

வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசையமு வாசையனல்மூட்டியுலைக் காய்ந்தமழு வாமெனவி காசமொடுமாட்டியெனைப் பாய்ந்துகட வோடடமொ டாடிவிடுவிஞ்சையாலே

வாய்த்தமலர்ச் சாந்துபுழு கானபனி நீர்களொடுகாற்றுவரத் தாங்குவன மார்பிலணி யாரமொடுவாய்க்குமெனப் பூண்டழக தாகபவி சோடுமகிழ்வன்புகூரத்

தீட்டுவிழிக் காந்திமட வார்களுட னாடிவலைபூட்டிவிடப் போந்துபிணி யோடுவலி வாதமெனசேர்த்துவிடப் பேர்ந்துவினை மூடியடி யேனுமுனதன்பிலாமல்

தேட்டமுறத் தேர்ந்துமமிர் தாமெனவெ யேகிநமனோட்டிவிடக் காய்ந்துவரி வேதனடை யாளமருள்சீட்டுவரக் காண்டுநலி காலனணு காநினருளன்புதாராய்

வேட்டுவரைக் காய்ந்துகுற மாதையுற வாடியிருள்நாட்டவரைச் சேந்தகதிர் வேல்கொடம ராடிசிறைமீட்டமரர்க் காண்டவனை வாழ்கநிலை யாகவைகும்விஞ்சையோனே

வேற்றுருவிற் போந்துமது ராபுரியி லாடிவைகையாற்றின்மணற் றாங்குமழு வாளியென தாதைபுரமேட்டையெரித் தாண்டசிவ லோகன்விடை யேறியிடமுங்கொளாயி

கோட்டுமுலைத் தாங்குமிழை யானஇடை கோடிமதிதோற்றமெனப் போந்தஅழ கானசிவ காமிவிறல்கூற்றுவனைக் காய்ந்தஅபி ராமிமன தாரஅருள்கந்தவேளே

கூட்டுநதித் தேங்கியவெ ளாறுதர ளாறுதிகழ்நாட்டிலுறைச் சேந்தமயி லாவளிதெய் வானையொடெகூற்றுவிழத் தாண்டியென தாகமதில் வாழ்குமரதம்பிரானே.

All songs →