Song 755
நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற் ...... படியாதே
- Sthalam
- வேப்பஞ்சந்தி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் -தாத்தந் தந்தத் தந்தத் தனனத்தனதான
Lyrics
நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற்படியாதே
நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப்பதமீவாய்
வாட்டங் கண்டுற் றண்டத் தமரப்படைமீதே
மாற்றந் தந்துப் பந்திச் சமருக்கெதிரானோர்
கூட்டங் கந்திச் சிந்திச் சிதறப்பொருவோனே
கூற்றன் பந்திச் சிந்தைக் குணமொத்தொளிர்வேலா
வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக்கிளையோனே
வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப்பெருமாளே.
