Song 739
சீத மதிய மெறிக்குந் ...... தழலாலே
- Sthalam
- திருவர்முர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தனன தனத்தந்தனதான
Lyrics
சீத மதிய மெறிக்குந்தழலாலே
சீறி மதனன் வளைக்குஞ்சிலையாலே
ஓத மருவி யலைக்குங்கடலாலே
ஊழி யிரவு தொலைக்கும்படியொதான்
மாது புகழை வளர்க்குந்திருவர்முர்
வாழு மயிலி லிருக்குங்குமரேசா
காத லடியர் கருத்தின்பெருவாழ்வே
காலன் முதுகை விரிக்கும்பெருமாளே.
