Song 738
விடமும் வேலன மலரன விழிகளு
- Sthalam
- திருவதிகை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தானன தனதன தனதனதனன தானன தனதன தனதனதனன தானன தனதன தனதனதனதான
Lyrics
விடமும் வேலன மலரன விழிகளுமிரத மேதரு மமுதெனு மொழிகளும்விரகி னாலெழு மிருதன வகைகளுமிதமாடி
மிகவு மாண்மையு மெழினல முடையவர்வினையு மாவியு முடனிரு வலையிடைவெளியி லேபட விசிறிய விஷமிகளுடன்மேவா
இடரு றாதுனை நினைபவர் துணைகொளஇனிமை போலெழு பிறவியெ னுவரியினிடைகெ டாதினி யிருவினை யிழிவினிலிழியாதே
இசையி னாடொறு மிமையவர் முநிவர்கள்ககன பூபதி யிடர்கெட அருளியஇறைநி னாறிரு புயமென வுரைசெயஅருள்வாயே
படரு மார்பினி லிருபது புயமதொடரிய மாமணி முடியொளி ரொருபதுபடியி லேவிழ வொருகணை தொடுபவரிடமாராய்
பரவை யூடெரி பகழியை விடுபவர்பரவு வார்வினை கெடஅரு ளுதவியெபரவு பால்கட லரவணை துயில்பவர்மருகோனே
அடர வேவரு மசுரர்கள் குருதியைஅரக ராவென அலகைகள் பலியுணஅலையும் வேலையும் அலறிட எதிர்பொருமயில்வீரா
அமர ராதிய ரிடர்பட அடர்தருகொடிய தானவர் திரிபுர மெரிசெய்தஅதிகை மாநகர் மருவிய சசிமகள்பெருமாளே.
