Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 737

பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்தனதனனத் தனதனனத்தனதான

Lyrics

பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப்பவளநிறத் ததரம்விளைத்தமுதூறல்

பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப்படைமதனக் கலையடவிப்பொதுமாதர்

சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத்துகிலகலக் க்ருபைவிளைவித்துருகாமுன்

சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற்சுழலுமனக் கவலையொழித்தருள்வாயே

கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக்கணைதொடுமச் சுதன்மருகக்குமரேசா

கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக்கவிநிறையப் பெறும்வரிசைப்புலவோனே

திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்செறியும்வயற் கதிரலையத்திரைமோதித்

திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித்திருவதிகைப் பதிமுருகப்பெருமாளே.

All songs →