Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 740

அரியய னறியா தவரெரி புர்மு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - ஆதிதனதன தனனா தனதன தனனாதனதன தனனாதனதான

Lyrics

அரியய னறியா தவரெரி புர்முணதுபுக நகையேவியநாதர்

அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீறழலையு மழுநேர்பிடிநாதர்

வரைமக ளொருகூ றுடையவர் மதனாகமும்விழ விழியேவியநாதர்

மனமகிழ் குமரா எனவுன திருதாள்மலரடி தொழுமாறருள்வாயே

அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்அவனியை வலமாய்வருவோனே

அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்அயில்தனை விசையாய்விடுவோனே

வரிசையொ டொருமா தினைதரு வனமேமருவியொர் குறமாதணைவேடா

மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்வருதவ முநிவோர்பெருமாளே.

All songs →