Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 731

கால முகிலென நினைவுகொ டுருவிலி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தான தனதன தனதன தனதனதான தனதன தனதன தனதனதான தனதன தனதன தனதனதனதான

Lyrics

கால முகிலென நினைவுகொ டுருவிலிகாதி யமர்பொரு கணையென வடுவகிர்காணு மிதுவென இளைஞர்கள் விதவிடுகயலாலுங்

கான மமர்குழ லரிவையர் சிலுகொடுகாசி னளவொரு தலையணு மனதினர்காம மிவர்சில கபடிகள் படிறுசொல்கலையாலுஞ்

சால மயல்கொடு புளகித கனதனபார முறவண முருகவிழ் மலரணைசாயல் தனின்மிகு கலவியி லழிவுறும்அடியேனைச்

சாதி குலமுறு படியினின் முழுகியதாழ்வ தறஇடை தருவன வெளியுயர்தாள தடைவது தவமிக நினைவதுதருவாயே

வேலை தனில்விழி துயில்பவ னரவணைவேயி னிசையது நிரைதனி லருள்பவன்வீர துரகத நரபதி வனிதையர்கரமீதே

வேறு வடிவுகொ டுறிவெணெய் தயிரதுவேடை கெடவமு தருளிய பொழுதினில்வீசு கயிறுட னடிபடு சிறியவனதிகோப

வாலி யுடனெழு மரமற நிசிசரன்வாகு முடியொரு பதுகர மிருபதுமாள வொருசரம் விடுமொரு கரியவன்மருகோனே

வாச முறுமலர் விசிறிய பரிமளமாதை நகர்தனி லுறையுமொ ரறுமுகவானி லடியவ ரிடர்கெட அருளியபெருமாளே.

All songs →