Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 730

கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தானத் தானன, தனதன தானத் தானனதனதன தானத் தானனதனதான

Lyrics

கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடுகனியமு தூறித் தேறியமொழிமாதர்

கலவிகள் நேரொப் பாகிகள் மதனிகள் காமக் க்ரோதிகள்கனதன பாரக் காரிகள்செயலோடே

பொருகயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக் காரிகள்பொருளள வாசைப் பாடிகள்புவிமீதே

பொதுவிகள் போகப் பாவிகள் வசமழி வேனுக் கோரருள்புரிவது தானெப் போததுபுகல்வாயே

தருவடு தீரச் சூரர்கள் அவர்கிளை மாளத் தூளெழசமனிலை யேறப் பாறொடுகொடிவீழத்

தனதன தானத் தானன எனஇசை பாடிப் பேய்பலதசையுண வேல்விட் டேவியதனிவீரா

அரிதிரு மால்சக் ராயுத னவனிளை யாள் முத் தார்நகைஅழகுடை யாள்மெய்ப் பாலுமையருள்பாலா

அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடியஅழகர்தென் மாதைக் கேயுறைபெருமாளே.

All songs →