Song 732
அச்சா யிறுக்காணி காட்டிக் கடைந்த
- Sthalam
- தச்சூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தா தனத்தான தாத்தத் தனந்ததத்தா தனத்தான தாத்தத் தனந்ததத்தா தனத்தான தாத்தத் தனந்ததனதான
Lyrics
அச்சா யிறுக்காணி காட்டிக் கடைந்தசெப்பார் முலைக்கோடு நீட்டிச் சரங்களைப்போல் விழிக்கூர்மை நோக்கிக் குழைந்துஉ றவாடி
அத்தா னெனக்காசை கூட்டித் தயங்கவைத்தா யெனப்பேசி மூக்கைச் சொறிந்துஅக்கா லொருக்கால மேக்கற் றிருந்திரிலையாசை
வைச்சா யெடுப்பான பேச்சுக் கிடங்களொப்பா ருனக்கீடு பார்க்கிற் கடம்பன்மட்டோ எனப்பாரின் மூர்க்கத் தனங்களதனாலே
மைப்பா கெனக்கூறி வீட்டிற் கொணர்ந்துபுற்பா யலிற்காலம் வீற்றுக் கலந்துவைப்பார் தமக்காசை யாற்பித் தளைந்துதிரிவேனோ
எச்சாய் மருட்பாடு மேற்பட் டிருந்தபிச்சா சருக்கோதி கோட்டைக் கிலங்கமிக்கா நினைப்போர்கள் வீக்கிற் பொருந்திநிலையாயே
எட்டா மெழுத்தேழை யேற்குப் பகர்ந்தமுத்தா வலுப்பான போர்க்குட் டொடங்கியெக்காலு மக்காத சூர்க்கொத் தரிந்தசினவேலா
தச்சா மயிற்சேவ லாக்கிப் பிளந்தசித்தா குறப்பாவை தாட்குட் படிந்துசக்காகி யப்பேடை யாட்குப் புகுந்துமணமாகித்
தப்பாம லிப்பூர்வ மேற்குத் தரங்கள்தெற்காகு மிப்பாரில் கீர்த்திக் கிசைந்ததச்சூர் வடக்காகு மார்க்கத் தமர்ந்தபெருமாளே.
