Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 717

மாதர் கொங்கையில் வித்தா ரத்திரு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தான தந்தன தத்தா தத்தனதான தந்தன தத்தா தத்தனதான தந்தன தத்தா தத்தனதனதான

Lyrics

மாதர் கொங்கையில் வித்தா ரத்திருமார்பி லங்கியல் முத்தா ரத்தினில்வாச மென்குழ லிற்சே லைப்பொரும்விழிவேலில்

மாமை யொன்றும லர்த்தாள் வைப்பினில்வாகு வஞ்சியில் மெய்த்தா மத்தினில்வானி ளம்பிறை யைப்போல் நெற்றியில்மயலாகி

ஆத ரங்கொடு கெட்டே யிப்படிஆசை யின்கட லுக்கே மெத்தவும்ஆகி நின்றுத வித்தே நித்தலும்அலைவேனோ

ஆறி ரண்டுப ணைத்தோ ளற்புதஆயி ரங்கலை கத்தா மத்திபனாயு ழன்றலை கிற்பே னுக்கருள்புரிவாயே

சாத னங்கொடு தத்தா மெத்தெனவேந டந்துபொய் பித்தா வுத்தரமேதெ னும்படி தற்காய் நிற்பவர்சபையூடே

தாழ்வில் சுந்தர னைத்தா னொற்றிகொள்நீதி தந்திர நற்சார் புற்றருள்சால நின்றுச மர்த்தா வெற்றிகொளரன்வாழ்வே

வேத முங்கரி யைச்சூழ் நித்தமும்வேள்வி யும்புவி யிற்றா பித்தருள்வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ்மறையோர்வாழ்

மேரு மங்கையி லத்தா வித்தகவேலொ டும்படை குத்தா வொற்றியவேடர் மங்கைகொள் சித்தா பத்தர்கள்பெருமாளே.

All songs →