Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 716

நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தானனத் தனதான தானனத் தனதானதானனத் தனதானதனதான

Lyrics

நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகிநேசமுற் றடியேனுநெறிகெடாய்

நேமியிற் பொருள்தேடி யோடியெய்த் துளம்வாடிநீதியிற் சிவவாழ்வைநினையாதே

பாழினுக் கிரையாய நாமம்வைத் தொருகோடிபாடலுற் றிடவேசெய்திடுமோச

பாவியெப் படிவாழ்வ னேயர்கட் குளதானபார்வைசற் றருளோடுபணியாயோ

ஆழியிற் றுயில்வோனு மாமலர்ப் பிரமாவுமாகமப் பொருளோருமனைவோரும்

ஆனைமத் தகவோனும் ஞானமுற் றியல்வோருமாயிரத் திருநூறுமறையோரும்

வாழுமுத் தரமேருர் மேவியற் புதமாகவாகுசித் திரதோகைமயிலேறி

மாறெனப் பொருசூர னீறெழப் பொரும்வேலமான்மகட் குளனானபெருமாளே.

All songs →