Song 705
ஏறா னாலே நீறாய் மாயா
- Sthalam
- கோடைநகர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானா தானா தானா தானாதானா தானாதனதானா
Lyrics
ஏறா னாலே நீறாய் மாயாவேளே வாசக்கணையாலே
ஏயா வேயா மாயா வேயாலாமே ழோசைத்தொளையாலே
மாறா யூறா யீறாய் மாலாய்வாடா மானைக்கழியாதே
வாராய் பாராய் சேரா யானால்வாடா நீபத்தொடைதாராய்
சீறா வீறா ஈரேழ் பார்சூழ்சீரார் தோகைக்குமரேசா
தேவா சாவா மூவா நாதாதீரா கோடைப்பதியோனே
வேறாய் மாறா யாறா மாசூர்வேர்போய் வீழப்பொருதோனே
வேதா போதா வேலா பாலாவீரா வீரப்பெருமாளே.
