Song 706
ஞால மெங்கும் வளைத்த ரற்று ...... கடலாலே
- Sthalam
- கோடைநகர்
- Raagam
- ஹம்ஸாநந்தி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (10)(மிஸ்ர ஜம்பை /7 யு 0)தகிட தக திமி-3 1/2, தகிட தக திமி-3 1/2, தகதிமிதக-3தான தந்த தனத்த தத்ததனதானா
Lyrics
ஞால மெங்கும் வளைத்த ரற்றுகடலாலே
நாளும் வஞ்சி யருற்று ரைக்கும்வசையாலே
ஆலமுந்து மதித்த ழற்கும்அழியாதே
ஆறி ரண்டு புயத்த ணைக்கவருவாயே
கோல மொன்று குறத்தி யைத்தழுவுமார்பா
கோடை யம்பதி யுற்று நிற்குமயில்வீரா
கால னஞ்ச வரைத்தொ ளைத்தமுதல்வானோர்
கால்வி லங்கு களைத்த றித்தபெருமாளே.
