Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 704

சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் -தானதன தான தந்த தானதன தான தந்ததானதன தான தந்ததனதான

Lyrics

சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்துசாமளவ தாக வந்துபுவிமீதே

சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்துதாரணியி லேத வழ்ந்துவிளையாடிப்

பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள்பாரதன மீத ணைந்துபொருள்தேடிப்

பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்றுபாதமலர் சேர அன்புதருவாயே

ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்ஆடரவு பூணர் தந்தமுருகோனே

ஆனைமடு வாயி லன்று மூலமென வோல மென்றஆதிமுதல் நார ணன்றன்மருகோனே

கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தைகோவையமு தூற லுண்டகுமரேசா

கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்தகோடைநகர் வாழ வந்தபெருமாளே.

All songs →