Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 673

கனவாலங் கூர்விழி மாதர்கள்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதானந் தானன தானனதனதானந் தானன தானனதனதானந் தானன தானனதனதான

Lyrics

கனவாலங் கூர்விழி மாதர்கள்மனசாலஞ் சால்பழி காரிகள்கனபோகம் போருக மாமிணைமுலைமீதே

கசிவாருங் கீறுகி ளாலுறுவசைகாணுங் காளிம வீணிகள்களிகூரும் பேயமு தூணிடுகசுமாலர்

மனவேலங் கீலக லாவிகள்மயமாயங் கீதவி நோதிகள்மருளாருங் காதலர் மேல்விழுமகளீர்வில்

மதிமாடம் வானிகழ் வார்மிசைமகிழ்கூரும் பாழ்மன மாமுனமலர்பேணுந் தாளுன வேயருளருளாயோ

தனதானந் தானன தானனஎனவேதங் கூறுசொல் மீறளிததைசேர்தண் பூமண மாலிகையணிமார்பா

தகரேறங் காரச மேவியகுகவீரம் பாகும ராமிகுதகைசாலன் பாரடி யார்மகிழ்பெருவாழ்வே

தினமாமன் பாபுன மேவியதனிமானின் தோளுட னாடியதினைமாவின் பாவுயர் தேவர்கள்தலைவாமா

திகழ்வேடங் காளியொ டாடியஜெகதீசங் கேசந டேசுரர்திருவாலங் காடினில் வீறியபெருமாளே.

All songs →