Song 674
பொன்றாமன் றாக்கும் புதல்வரும்
- Sthalam
- திருவாலங்காடு
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தானந் தாத்தம் தனதனதந்தானந் தாத்தம் தனதனதந்தானந் தாத்தம் தனதனதனதான
Lyrics
பொன்றாமன் றாக்கும் புதல்வரும்நன்றாமன் றார்க்கின் றுறுதுணைபொன்றானென் றாட்டம் பெருகியபுவியூடே
பொங்காவெங் கூற்றம் பொதிதருசிங்காரஞ் சேர்த்திங் குயரியபுன்கூடொன் றாய்க்கொண் டுறைதருமுயிர்கோல
நின்றானின் றேத்தும் படிநினைவுந்தானும் போச்சென் றுயர்வறநிந்தாகும் பேச்சென் பதுபடநிகழாமுன்
நெஞ்சாலஞ் சாற்பொங் கியவினைவிஞ்சாதென் பாற்சென் றகலிடநின்தாள்தந் தாட்கொண் டருள்தரநினைவாயே
குன்றால்விண் டாழ்க்குங் குடைகொடுகன்றாமுன் காத்துங் குவலயமுண்டார்கொண் டாட்டம் பெருகியமருகோனே
கொந்தார்பைந் தார்த்திண் குயகுறமின்தாள்சிந் தாச்சிந் தையில்மயல்கொண்டேசென் றாட்கொண் டருளெனமொழிவோனே
அன்றாலங் காட்டண் டருமுயநின்றாடுங் கூத்தன் திருவருள்அங்காகும் பாட்டின் பயனினையருள்வாழ்வே
அன்பால்நின் தாட்கும் பிடுபவர்தம்பாவந் தீர்த்தம் புவியிடைஅஞ்சாநெஞ் சாக்கந் தரவலபெருமாளே.
