Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 672

மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாது

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - திஸ்ர த்ருவம் - திஸ்ரநடை (10 1/2)(எடுப்பு - /3/3/3 0)தனன தந்த தான தனன தந்த தானதனன தந்த தானதனதான

Lyrics

மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாதுமலமி தென்று போடஅறியாது

மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும்வகையில் வந்தி ராதஅடியேனும்

உ ருகி யன்பி னோடு உ னைநி னைந்து நாளும்உ லக மென்று பேசஅறியாத

உ ருவ மொன்றி லாத பருவம் வந்து சேரஉ பய துங்க பாதமருள்வாயே

அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும்அடிப ணிந்து பேசிகடையூடே

அருளு கென்ற போது பொருளி தென்று காணஅருளு மைந்த ஆதிகுருநாதா

திரியு மும்பர் நீடு கிரிபி ளந்து சூரர்செருவ டங்க வேலைவிடுவோனே

செயல மைந்த வேத தொனிமு ழங்கு வீதிதிருவி ரிஞ்சை மேவுபெருமாளே.

All songs →