Song 657
சிகரிக ளிடிய நடநவில் கலவி
- Sthalam
- வெள்ளிகரம்
- Raagam
- மாயாமாளவகெளளை
- Thalam
- அங்கதாளம் (15)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3தனதன தனன தனதன தனனதய்ய தனத்த தந்ததனதான
Lyrics
சிகரிக ளிடிய நடநவில் கலவிசெவ்வி மலர்க்க டம்புசிறுவாள்வேல்
திருமுக சமுக சததள முளரிதிவ்ய கரத்தி ணங்குபொருசேவல்
அகிலடி பறிய எறிதிரை யருவிஐவன வெற்பில் வஞ்சிகணவாஎன்
றகிலமு முணர மொழிதரு மொழியினல்லது பொற்பதங்கள்பெறலாமோ
நிகரிட அரிய சிவசுத பரமநிர்வச னப்ர சங்ககுருநாதா
நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழையநெல்லி மரத்த மர்ந்தஅபிராம
வெகுமுக ககன நதிமதி யிதழிவில்வ முடித்த நம்பர்பெருவாழ்வே
விகசித கமல பரிமள கமலவெள்ளி கரத்த மர்ந்தபெருமாளே.
