Song 656
அடலரி மகவு விதிவழி யொழுகு
- Sthalam
- வெள்ளிகரம்
- Raagam
- சாமா
- Thalam
- அங்கதாளம் (15)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3தனதன தனன தனதன தனனதய்ய தனத்த தந்ததனதானா
Lyrics
அடலரி மகவு விதிவழி யொழுகுமைவ ருமொய்க்கு ரம்பையுடனாளும்
அலைகட லுலகி லலம்வரு கலகவைவர் தமக்கு டைந்துதடுமாறி
இடர்படு மடிமை யுளமுரை யுடலொடெல்லை விடப்ர பஞ்சமயல்தீர
எனதற நினது கழல்பெற மவுனவெல்லை குறிப்ப தொன்றுபுகல்வாயே
வடமணி முலையு மழகிய முகமும்வள்ளை யெனத்த யங்குமிருகாதும்
மரகத வடிவு மடலிடை யெழுதிவள்ளி புனத்தில் நின்றமயில்வீரா
விடதர திகுணர் சசிதரர் நிமலர்வெள்ளி மலைச்ச யம்புகுருநாதா
விகசித கமல பரிபுர முளரிவெள்ளி கரத்த மர்ந்தபெருமாளே.
