Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 655

அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு

Thalam
அங்கதாளம் (5 1/2)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2தனதன தனத்த தான தனதன தனத்த தானதனதன தனத்த தானதனதான

Lyrics

அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணுமரனிட மிருக்கு மாயியருள்வோனே

அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூருமணிமயில நடத்து மாசைமருகோனே

பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்பனிருகர மிகுத்த பாரமுருகாநின்

பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள்பணியவு மெனக்கு ஞானம்அருள்வாயே

சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக் குளாதிசொலுவென வுரைத்த ஞானகுருநாதா

சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீளதுணிபட அரக்கர் மாளவிடும்வேலா

மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்வயல்புடை கிடக்கு நீலமலர்வாவி

வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறுவயிரவி வனத்தில் மேவுபெருமாளே.

All songs →