Song 658
குவலய மல்கு தவலிகள் முல்லை
- Sthalam
- வெள்ளிகரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தய்ய தனதன தய்யதனதன தய்யதனதான
Lyrics
குவலய மல்கு தவலிகள் முல்லைகுளிர்நகை சொல்லுமுதுபாகு
குழையிள வள்ளை யிடைசிறு வல்லிகுயமுலை கொள்ளைவிழைமேவிக்
கவலைசெய் வல்ல தவலரு முள்ளகலவியில் தெள்ளுகவிமாலை
கடிமல ரைய அணிவன செய்யகழலிணை பையஅருள்வாயே
தவநெறி யுள்ளு சிவமுனி துள்ளுதனியுழை புள்ளியுடனாடித்
தருபுன வள்ளி மலைமற வள்ளிதருதினை மெள்ளநுகர்வோனே
அவநெறி சொல்லு மவரவை கொல்லுமழகிய வெள்ளிநகர்வாழ்வே
அடையலர் செல்வ மளறிடை செல்லஅமர்செய வல்லபெருமாளே.
