Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 62

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - கண்டசாபு (2 1/2)தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்தந்ததன தந்தனந்தந்ததானா

Lyrics

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்தண்கழல்சி லம்புடன்கொஞ்சவேநின்

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்சந்தொடம ணைந்துநின்றன்புபோலக்

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்கஞ்சமலர் செங்கையுஞ்சிந்துவேலும்

கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்கண்குளிர என்றன்முன்சந்தியாவோ

புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்பொங்கியெழ வெங்களங்கொண்டபோது

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்புண்டரிகர் தந்தையுஞ்சிந்தைகூரக்

கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்கொஞ்சிநட னங்கொளுங்கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்கும்பமுநி கும்பிடுந்தம்பிரானே.

All songs →