Song 63
தந்த பசிதனைய றிந்து முலையமுது
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- ஆரபி
- Thalam
- ஆதி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்த தனதனன தந்த தனதனனதந்த தனதனனதனதானா
Lyrics
தந்த பசிதனைய றிந்து முலையமுதுதந்து முதுகுதடவியதாயார்
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுளதங்கை மருகருயிரெனவேசார்
மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவுமந்த வரிசைமொழிபகர்கோடா
வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகமயங்க வொருமகிடமிசையேறி
அந்த கனுமெனைய டர்ந்து வருகையினிலஞ்ச லெனவலியமயில்மேல்நீ
அந்த மறலியொடு கந்த மனிதனமதன்ப னெனமொழியவருவாயே
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்சிந்து பயமயிலுமயில்வீரா
திங்க ளரவுநதி துன்று சடிலரருள்செந்தி னகரிலுறைபெருமாளே.
